சங்கராபுரம் சமத்துவபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 43 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே சமத்துவபுரம் அருகே வசிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள் சுடுகாடு மற்றும் கிணறு வெட்டி அவ்விடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் வகையில் 15 மீட்டர் அகலத்தில் பாதை அமைக்கும் பொருட்டு நரிக்குறவர் காலனி மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த ஆக்கிரமிப்புகள் டி.எஸ்.பி. பார்த்தீபன், தாசில்தார் சசிகலா, இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோரது தலடைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
நரிக்குறவர் காலனி மக்களுக்கு மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்துள்ளார்.