
கடலூர் கேன்சர் மருத்துவமனை எதிர் தெருவில் ஒருவருடைய வீட்டில் உள்ள ஷுவினுள் சாரை பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக வந்த பாம்பு பிடி வீரர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்து காப்பு காட்டில் விட எடுத்து சென்றார். தங்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.