கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மூலம் காந்தி சிலை வீதியில் வணிகர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பழைய காவல் நிலையம் அருகே பொது கழிப்பறை தச்சர் தெருவில் கட்டப்பட்டுள்ளது. இதை சில தனிப்பட்ட வணிகர்கள் கழிப்பறையை பூட்டு போட்டு பூட்டி பூட்டி வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் காலை 9 மணிக்கு மேல் மட்டுமே கழிப்பறை திறந்து வைக்கப்படுகிறது.இதனால் கடைவீதியில் அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து வியாபாரம் செய்யும் சிறு குறு வணிகர்கள் முதல் நடைபாதை கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள்
இந்த பொது சுகாதார கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காலையில் உபாதைகளை கழிக்க முடியாமல் மிகவும் குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆகையால் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட சில வணிகர்கள் கையில் இருக்கும் பொது கழிப்பறையை அனைத்து சிறு குறு வணிகர்களும் வாடிக்கையாளர்களும் எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு எந்நேரமும் பொது சுகாதார கழிப்பறையை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.