
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் எழுந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகள் விஜயகுமாரி கொடுத்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.