சங்கராபுரம் அடுத்த எஸ். வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மகிழ் முற்றம் மாணவர் கட்டமைப்பு துவக்க விழா நடந்தது.ஐவகை நிலங்கள் அடிப்படையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முல்லைமணி தலைமை தாங்கி பேசுகையில் ‘அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்கப்படுத்துதல்.
ஆசிரியர், மாணவர் உறவை மேம்படுத்துதல். தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல். இடை நிற்றலை தடுத்தல் இக்குழுவின் நோக்கம்’ என்றார். உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.