
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆதனூர், ஒண்ணுபுரம், சிறுமூர் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், இறந்த ஆசிரியை ரமணிக்கு அஞ்சலி செலுத்தினர்.