கோக்கு மாக்கு

ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக வாசகதமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரத ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமை வகித்தார்.

நலப் பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியது: பல ஆண்டுகளாக குடும்பநல அறுவை சிகிச்சை முறைகளை பெண்களே அதிகம் கடைப்பிடித்து வருகின்றனர். இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்கள் குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தன் மனைவியை சிரமப்படுத்த விரும்பாத கணவன், நவீன தழும்பில்லாத ஆண் கருத்தடை சிகிச்சை முறையை செய்து கொள்ளலாம். இதை ஏற்றுக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,100, கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் நபருக்கு ரூ.200 தமிழக அரசால் வழங்கப்படும். முதலில் கருத்தடை சிகிச்சை செய்துகொள்ளும் 50 பேருக்கு ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும் என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button