
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் சென்னை மக்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த வீராணம் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீராணம் ஏரியின் ஷட்டர் திடீரென உடைந்தது. இதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க ஜேசிபி மூலம் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.