
கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி பெறாமல் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றிட அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி அளவில் 104 பதாகைகள், நகராட்சி அளவில் 154 பேனர்கள் மற்றும் பேரூராட்சி அளவில் 99 பதாகைகள் என மொத்தம் 357 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் விளம்பர பேனர்கள் வைப்பவர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.