
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சரக பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பருத்தி கிராமம் அருகே பைக்கில் ஒருவர் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் வருவதைக் கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போலீசாரின் விசாரணையில், தப்பியோடியவர் அரும்பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பைக் மற்றும் அதில் பதுக்கி வைத்திருந்த 43 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.