வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் இன்று 23.11.2024 – சனிக்கிழமை, நாளை 24. 11. 2024- ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் மேற்கண்டுள்ள நாட்களில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கடலூர் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக பொறுப்பாளர் அனைவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.