
உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம், கிராம கணக்குள், பசலி ஆண்டு கணக்குள், சிட்டா, பிறப்பு இறப்பு பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மனுக்களின் நிலை குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.