
கடலூர் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். உடன் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர். இந்த கூட்டத்தில் வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பேசப்பட்டது.