
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா மற்றும் முதுநகர் பகுதியில் கடலில் நேற்று 30 முதல் 40 கி. மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது.