திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் இலவச கண், பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.அகில இந்திய கூட்டுறவு வார விழா நிறைவு நாளையொட்டி, நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை சரக துணைப் பதிவாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக செங்கம் எம்எல்ஏ., மு. பெ. கிரி பங்கேற்று முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.முகாமில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததுடன் ஆலோசனை வழங்கினர். இதில், 36 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டன.