
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் ஊராட்சி சார்பாக கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரஸ்வதி சேகர் முன்னிலை வகித்தார். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.