
கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர், சிதம்பரம், புவனகிரி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமானவை குறித்து விவாதிக்கப்பட்டது.