கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். பயிற்சியில், 146 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தமிழ், ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் 250 பேர் பங்கேற்றனர்.
அனைத்து மாணவர்களையும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைப்பது, அதிக மதிப்பெண் பெற வைப்பது. பள்ளிக்கு வருகை புரியாமல், அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தேர்ச்சி பெற வலைப்பது உள்ளிட்டவைகள் குறித்து சி.இ.ஓ., அறிவுறுத்தி ஆலோசனை வழங்கினார்.