
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். சின்னசேலம் தாலுகா, ராயப்பனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் துவக்க பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம் பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.ஆய்வில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான படிவங்கள், பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, புதிய வாக்காளர்களை அதிக அளவு சேர்த்திட அறிவுறுத்தினார்.