
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி பகுதியில் (பாகம் எண் 150 முதல் 172 வரை) உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு முகாம்களை கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் சி. கே. அன்பு பார்வையிட்டார். உடன் பேரூராட்சி தலைவர் சரவணன் துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.