
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று(நவம்பர் 24) தேசிய மாணவர் படை நாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய மாணவர் படைத்தலைவர் திரு. சுப்ரமணியன் விழாவை தலைமையேற்று நடத்தினார். மேலும் தேசிய மாணவர் படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.