
உடுமலைபேட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்ப்பதற்கு பயணிகள் வேனில் புறப்பட்டனர். திங்கள்கிழமை பெண் பார்ப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் வேன் சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை ஓட்டுநர் கார்த்தி ஓட்டினார். திம்பம் 11வது வளைவில் வந்து கொண்டிருந்தபோது சாரல் மழைகாரணமாக வேன் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழுந்து கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த உடுமலையைச் சேர்ந்த சண்முகசந்திரம், சதீஸ், ரமணி,சண்முகபிரியா,மல்லீஸ்வரி மற்றும் ஓட்டுநர் கார்த்தி உட்பட 10 காயமின்றி உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.