
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நடுகுப்பம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா இன்று(நவம்பர் 24) நடைபெற்றது. இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து எல்லைக்கோட்டை தாண்டி ஓடின. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.