
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான காவல் துறையினர் கொரக்கவாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள வெள்ளாற்றின் கரையோரம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கோ. குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கனகவல்லி என்பவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.