
நெய்வேலி ஜெயப்பிரியா குழும் நிறுவனர் ராஜகோபாலன் மனைவியும், ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் தாயாருமான கஸ்துாரி அம்மாள் உயிரிழந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவருடைய படத்தை திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.