
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம் விருத்தாச்சலம், ஹோஸ்ட் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி விருத்தாச்சலம், நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சங்கரா கண் மருத்துவமனை கோயம்புத்தூர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் கடலூர் இணைந்து நடத்தும் 99 வது இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று (நவ., 24) நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் 500 ற்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.