திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனர் ஏ. சி. சண்முகம் தலைமை வகித்தார். தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏ.சி. சண்முகம் பேசியதாவது: மாணவர்கள் படிப்பை தொடர்ந்து வேண்டும். மருத்துவத்தில் 1.5 லட்சம் பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ததால் இங்கிலாந்தில் எனக்கு டாக்டரேட் பட்டம் வழங்கினர். இதேபோல, ரஷ்யாவிலும் வழங்கியுள்ளனர். 100 பேர் படித்து வெளியில் செல்கிறார்கள் என்றால் 50 பேர் ஒருங்கிணைந்து தொழில் தொடங்க வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும். தற்போது, 100 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றுவர வழிவகை செய்யப்பட்டுள்ளது.எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள், வாழ்வில் முன்னேறலாம் என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் என். முருகவேல் பேசினார்.