கடலூர் முதுநகர் நகர காவல் நிலையத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது வரவேற்பறை குறிப்பேடு, முதல் தகவல் அறிக்கை பதிவேட்டை பார்வையிட்டு, சரியான தகவலின் அடிப்படையில் விபத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் முறை பற்றி கேட்டறிந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களுக்கு அறிவித்த ‘வார விடுப்பு’ முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். குறிப்பாக பெண் காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறை, அவர்களுக்கான பணி பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்து, மக்கள் நலன் காக்கின்ற கடலூர் நகர காவல் நிலையத்தின் பணி சிறக்க வாழ்த்தினார்.