
கடலூர் மாவட்டத்தில் உள்ள, கடலூர், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.