
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரப்பனூர் மற்றும் தீர்த்தனூர் கிராமங்களில் சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி தன்னார்வலர்கள் இன்று தூய்மைப்படுத்தினர். உடன் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தன்னார்வலர்களின் இச்செயலுக்கு கிராம மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.