
கல்வராயன்மலை, துரூர் கிராமத்தை சேர்ந்தவர் சிண்ணாண்டி மகன் சங்கர் 38, இவர் நேற்று முன்தினம் பகல் 3 மணியளவில் 2 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு துரூர் நோக்கி பைக்கில் சென்றார். புதுபாலப்பட்டு – துரூர் சாலையில் உள்ள புற்றுமாரியம்மன் கோவில் அருகே தனது பைக்கை நிறுத்தியுள்ளார்.அங்கு ஏற்கனவே நின்றிருந்த துரூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் பிரகாஷ் 25, என்பவர் சங்கர் வைத்திருந்த மதுபாட்டிலை கேட்டுள்ளார். சங்கர் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ் பீர்பாட்டிலால் சங்கரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குபதிந்து பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்