
மணலுார்பேட்டை தனியார் மண்டபத்தில் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., கிளை அமைப்பு தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சதீஷ் சிறப்புரையாற்றினார். இதில், புதிய கிளை தலைவர்களாக ஜெயராமன், அல்லிமுத்து, பச்சைமலை, பாபு, ரவிச்சந்திரன், துளசி, பரமேஷ், ஆனந்தன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, உறுதிமொழி ஏற்றனர்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு தீவிரமாக பணியாற்ற வேண்டும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் லுார்துராஜ், மகளிரணி ஒன்றிய தலைவி அலமேலு, ஒன்றிய செயலாளர் விஜயலட்சுமி, பிரிவு ஒன்றிய தலைவர்கள் பழனி, அஜித், சிவாஜி, பரசுராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய பொதுச்செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.