
கடலூர் மாவட்டம் தைகால் தோணித்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். கடலூர் சீற்றம் மற்றும் காற்றின் வேகத்தில் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்துள்ளது. கடலில் தத்தளித்த மீனவர்கள் தனியார் தொழிற்சாலைக்கான கப்பல் இறங்குதளத்தில் ஏறி உயிர் தப்பியுள்ளனர். கடல் சீற்றம் குறைந்தவுடன் படகு மூலம் மீனவர்களை மீட்டுள்ளதாக மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.