
இன்று (நவம்பர் 27) மாலை 5 மணி வாக்கில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) கடலூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நாளை கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.