
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று 27 ஆம் தேதி புதன்கிழமை அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு செய்ய இருந்தார். இந்த நிலையில் இன்று 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்ட கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.