
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.