
கடலூர் மாநகராட்சி 34-வது வார்டு குழந்தைகள் காலனியில் பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் பார்வையிட்டார். உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மழைநீரை உடனடியாக வெளியேற்ற கேட்டுக்கொண்டார். அப்போது முருகன், முரளி, ராமகிருஷ்ணன், விக்கி, சலீம், அருண், ஜவகர் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.