தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று ஆரணி நகர திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானமும், புதிய பேருந்து நிலையம் அருகே அன்னதானமும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பழமும் பிரெட்டும், மொழுகம்பூண்டி ஊராட்சி, வெள்ளேரி ஊராட்சியில் அன்னதானமும், நடுக்குப்பம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகமும், கார்னேசன் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் கொடுத்து கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், துரை, மாமது, மோகன், மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் அமர்ஷரிப், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.