
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி நிரம்பி வருகிறது. தற்போது வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 27) ஏரியை கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.