கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி மகள் செவிலியர் அபிநய ஸ்ரீ (வயது 19) நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை வீட்டிலிருந்து பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றார். மாலை திரும்பி வரவில்லை.
வீடு மற்றும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.