
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடந்தது. 50, 100 மற்றும் 200 மீட்டர் தொலைவுகள் மற்றும் 4 வகையான ‘ஸ்டைல்’களில் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.