உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கான அன்னதான கூடம் ரூ.2 கோடி மதிப்பிலான கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று (நவம்பர் 27) நடந்தது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் குமரகுருவரவேற்றார்.
நன்கொடையாளர் மிதுன் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஜே., பேரவை செயலாளர் ஞானவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, விநாயகா கல்வி குழுமத் தலைவர் நமச்சுவாயம், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், சுப்ராயன், சந்திரன், ராஜசேகர், தேவேந்திரன், கதிர். தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ஏகாம்பரம், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பழனிசாமி, சந்தோஷ், சேகர், பழனி, ராஜாராம், இளந்தேவன், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத் ஐயர் ஆகியோர் பங்கேற்றனர்.