
வங்ககடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை 29 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்பப் பெறுவதாக வானிலை மையம் அறிவித்த நிலையில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று(நவ.28) காலை முதலே கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான காற்று வீசி வருகிறது.