திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கம்பர் தெருவைச் சேர்ந்த அரவிந்த்ராஜ். தகவல் தொழில்நுட்ப ஊழியர். இவரது மனைவி சங்கவி. இவர்களது மகள் தியா. ஒரு வருடம் 10 மாதங்களே ஆன தியா, ட்ரெட்மில் எனும் நடைபயிற்சி செய்யும் இயந்திரத்தில் 0. 6 கி. மீ. தூரத்தை 9 நிமிடங்களில் நடந்து சாதனைப் படைத்தார்.
அவரின் சாதனையைப் பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி அண்மையில் பாராட்டியது.பெண் குழந்தையின் சாதனையைப் பாராட்டும் விதமாக இந்தியா புக் ஆப்ரெக்கார்ட்ஸ் 2024 புத்தகத்தில் அவரது சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது