கோக்கு மாக்கு
Trending

அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சந்தனம், பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button