கடலூர் எம்.பியான எம். கே. விஷ்ணு பிரசாத் என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தந்த பதிலில் இதுவரை கடலூர் மக்களுக்கு நெய்வேலி என்எல்சி சார்பாக சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக மிகச் சிறிய அளவிலான தொகையை மட்டுமே CSR மூலமாக செலவு செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தந்து, நீராதாரம் முற்றிலும் தொலைந்து, வியாதிகள் பல வரக் காரணமான என்எல்சி நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை வஞ்சித்து வருவதாக எம்பி விஷ்ணு பயிரசாத் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.