
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை வட்டார கல்வி அலுவலர் சுந்தர் தலைமை ஏற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வள மையம் மேற்பார்வையாளர்(பொ) சங்கீதா, ஐ இ டி ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.