திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சங்கச் செயலர் ஆ. மயில்வாகனன் முன்னிலை வகித்தார். சங்க செயற்குழு உறுப்பினர் கோ. பட்டு வரவேற்றார். கற்பவர் நோக்கிலும் காப்பியப் போக்கிலும் கர்ணன் குற்றவாளியே என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.
கவிஞர் நா. முத்துவேலன் வழக்கு தொடுத்து பேசினார். மா. ஏழுமலை வழக்கை மறுத்து பேசினார். நிறைவில் சங்கத் தலைவரும், நடுவருமான வே. சிவராமகிருஷ்ணன் கர்ணன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.
சங்கப் பொருளாளர் த. முருகவேல், துணைத் தலைவர் சாமி. பிச்சாண்டி, தகவல் தொடர்பாளர் மு. பிரபாகரன், மகளிரணிச் செயலர் தெ. உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.