தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வலியுறுத்தி, ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக எம்ஜிஆர் சிலை வரை சென்று, அங்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க நகரத் தலைவர் ஏ.எச். பக்ருதீன்அலி அகமது தலைமை வகித்தார். நகரச் செயலர் எம். ஜெயப்பிரகாசம், நகரப் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர்கள் வி. நடராஜன், வி.கே. ஷர்மா, முருகானந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கச் செயலர் விஜயகுமார், பொருளாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் கே. சிவக்குமார், ஆர். பழனி, பி. வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.