கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 45.10 அடியில் நீர் இருப்பு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வினாடிக்கு 173 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணத்திற்கு திறந்து விடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கீழணைக்கு கல்லணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கீழணைக்கான நீர் வரத்து நேற்று வினாடிக்கு 1850 கனஅடி என்கிற நிலையில் இருந்தது.மொத்தம் 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் தற்போது 7.50 அடி தண்ணீர் வைக்கப்பட்டு வடவாறு வழியாக வினாடிக்கு 1850 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.
இதன் மூலம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 950 கனஅடி என்கிற நிலையில் உள்ளது. எனவே தற்போது ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர தொடங்கி உள்ளது.